பயிர் பாதுகாப்பு :: ஏலக்காய் பயிரைத் தாக்கும் நோய்கள் |
நாற்றழுகல் / வேர் தண்டு அழுகல் / பற்றழுகல் நோய்: பைத்தியம் வெக்ஸான்ஸ், ப்யூசேரியம் ஆக்சிஸ்போரம், ரைசக்டோனியா சொலானி, பைட்டோப்தோரா வகை
அறிகுறிகள்:
- பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் இறந்து விடும்.
- புதிய கிளைகள் வலுக்குறைந்து காணப்படும் மற்றும் தண்டின் அடிப்பகுதியில் வேர் தண்டு அழுகி காணப்படும்.
- பாதிக்கப்பட்ட தாவரத்தை பிடுங்கினால் எளிதில் வந்துவிடும்.
கட்டுப்பாடு:
- பாதிக்கப்பட்ட தாவரங்களை அளிக்கவும்.
- முறையான வடிகால் வசதி வழங்கவும்.
- ஒவ்வொரு முறையும் நாற்றங்கால் இடத்தை மாற்றவும்.
- விதைத்து 15 நாட்களுக்குப்பின் காப்பர் ஆக்சிகுளோரைட் 0.25 சதம் அல்லது போர்டோ கலவை 0.5 சதம் கொண்டு நாற்றங்கால் படுக்கையை நனைக்கவும்.
- போர்டோ கலவை 1.0 சதம் அல்லது பி.சி.என்.பி. 1.0 சதம் கொண்டு மண்ணை நனைக்கவும்.
|
|
|